மாவீரர் தினத்தை மட்டுமல்ல தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையும் அனுஷ்டிக்க வேண்டாம் என அரியநேத்திரனுக்கு தடை உத்தரவு!

 

எதிர்வரும் நவம்பர் 26 தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை அனுஷ்டிப்பதோஇ மாவீரர் தினத்தை 20ஃ11ஃ2021 தொடக்கம் 27ஃ11ஃ2021இ வரை உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர வேண்டாம் என கொக்கட்டிச்சோலை பொலிஷாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியால் தடை உத்தரவு கட்டளை இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு அவரின் அம்பிளாந்துறை இல்லத்தில் சென்று கையளித்தனர்.

இந்த தடை உத்தரவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பட்டிப்பளை பிரதேசபை தவிசாளர் சீ.புஷ்பலிங்கம்பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணாக்கியன், கோ.கருணாகரம், தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் த.சுரேஷ் ,முன்னாள் போராளிகளான நடராசா சுரேஷ், தம்பித்துரை கஜேந்திரன் ஆகிய ஏழு பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.