திருகோணமலையில் கொவிட்19 தாக்கம் தீவிரமாக அதிகரித்துள்ளது

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவை  பிரதி பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த்
ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது என திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (20) இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 4 வரை 102 கொவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ள நிலையில் ஒக்டோபர் 5 தொடக்கம் ஒக்டோபர் 11 வரை 200 புதிய தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டார்கள் இது கொவிட் தொற்று அதிகரிப்பை எடுத்துக் காட்டுகிறது .நவம்பர் 12 தொடக்கம் 18 வரை 291 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளார்கள் இதில் இறப்புக்களின் எண்ணிக்கையானது ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 4 வரை மூவரும் , நவம்பர் 5 தொடக்கம் 11 வரை மூவரும், நவம்பர் 12 தொடக்கம் 18 வரை ஐந்து உயிரிழப்புக்களும் கொரோனா மரணங்களாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.