மலையக உரிமை மீட்பு பயணம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா ஹைபொரஸ்ட் வைத்தியசாலைக்கு ஒக்ஸி மீற்றர்

தலவாக்கலை பி.கேதீஸ்
மலையக உரிமை மீட்பு பயணம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா ஹைபொரஸ்ட் வைத்தியசாலைக்கு ஒக்ஸி மீற்றர்  என்ற வைத்திய உபகரணம் ஒன்றை இவ் அமைப்பின் அமைப்பாளரும்   மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம்  வைத்தியரிடம் நேற்று (19) வெள்ளிக்கிழமை வழங்கினார்.இதன்போது மலையக உரிமை மீட்பு பயணம் அமைப்பின் உறுப்பினர்களும் வைத்தியர்களும் கலந்துக்கொண்டனர்.