வரணியில் 3.2மில்லியன் ஒதுக்கீட்டில் மைதானப் புனரமைப்பு

த.சுபேசன்
சாவகச்சேரி நிருபர்
தென்மராட்சிக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வரணி மத்திய கல்லூரி மைதானப் புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு வைபவம் 16/11/2021 செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ப.செல்வவிநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேகச் செயலாளரும்,கரவெட்டி பிரதேசசபை உறுப்பினருமான ச.இராமநாதன் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.
நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய நூறு பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசில் 3.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் குறித்த மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்வில் தென்மராட்சிக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் காண்டீபன்,சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் தி.தங்கவேலு,மாவட்ட அபிவிருத்திக் குழு அலுவலக உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.