மதகு உடைந்து சேதம்; பாடசாலை செல்லும் மாணவர்கள் அசௌகரியம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு செல்லும் மதகு உடைந்த நிலையில் காணப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை (11) ஓட்டமாவடி பிரதேச சபை  தண்ணீர் பவுசர் மாணவர்களுக்கு குடிநீர் கொண்டு சென்ற போது இந்த மதகு உடைந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அதனை திருத்தியமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.