வவுணதீவில் 6 அடி 4 அடி உயரங்களுடைய கஞ்சா செடிகளுடன் பெண் ஒருவர் கைது

(வவுணதீவு எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் கஞ்சா செடியினை வளர்த்து வந்த பெண் ஒருவர் கஞ்சா செடிகளுடன்  சனிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் பெண் ஒருவர் தனது காணிக்குள் வளர்த்து வந்த 6 அடி மற்றும் 4 அடி உயரமுடைய இரு கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரின் காணி உரிமையாளரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொண்ட நடவடிக்கையின்போது   இக் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ். பிரியங்கர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரையும் கஞ்சா செடியையும் சனிக்கிழமை  நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்