தேசிய மட்ட காட்டா சுற்றுப் போட்டியில் ராம் கராத்தே தோ சங்கம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

வி.சுகிர்தகுமார்

 2021 ம் ஆண்டுக்கான   SLKF தேசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் ராம் கராத்தே தோ சங்கம் (RKO) கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்று சாதனையில் முன்னிலையில் உள்ளது.
இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தினால் (SLKF) நடாத்தப்பட்ட 2021 ம் ஆண்டுக்கான இணைய வழி (E-KATA) தேசிய மட்ட காட்டா சுற்றுப் போட்டியிலே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் இலங்கையில் SLKF இல் அங்கீகாரம் பெற்ற 125 கராத்தே கழகங்களில் இருந்து 3000 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்
இதில் ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச RKO சங்க மாணவர்கள் கலந்து கொண்டு
14 தங்கப்பதக்கம் 08 வெள்ளிப்பதக்கம், 12 வெண்கலப் பதக்கம் அடங்கலாக 34 பதக்கங்களை வென்று வடக்கு, கிழக்கு மண்ணில் முதன்மை நிலையிலும், தேசிய ரீதியில் 4வது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்..
தேசிய ரீதியில் புகழ் பெற்ற பல கழகங்களில் இருக்கும் போது விசேடமாக TEAM KATA போட்டியில் முதலாம் இடத்தினைப் RKO மாணவர்கள் பெற்றதும் பாராட்டத்தக்க விடயமாக கருதப்படுகின்றது.
இவ்வாறான தேசிய சாதனை புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்  அதேவேளை இம் மாணவர்களுக்கு முறையான தொடர் கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்ற RKO சங்கத்தின் தலைமை போதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி மற்றும்;, சிரேஷ்ட போதனாசிரியர்  சென்சி எம்.பி.செயினுலாப்தீன் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு இச் சாதனையாளர்களுக்கு புதிய நுட்பங்களை உள்ளடக்கிய விசேட பயிற்சிகளை வழங்கிக் கொண்டிக்கின்ற போதனாசிரியர்களும் கராத்தே பயிற்சியாளர்களுமான சென்சி கே.ராஜேந்திரபிரசாத் மற்றும் சென்சி கே.சாரங்கன் ஆகியோருக்கும் சங்கத்தின் தலைவர், ஆலோசகர் சிரேஷ்ட, கனிஷ்ட போதனாசிரியர்கள் பெற்றார்கள் உள்ளிட்டவர்களாலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.