கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டு.மாநகர சபை மேயர் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.

(ரீ.எல்.ஜவ்பர்கான்–மட்டக்களப்பு) கிழக்கு மாகாண ஆளுநர்; மற்;றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பிரதி ஆiணாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதி மேயர் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும்  சில கட்சி மாநகர சபை உறுப்பினர்களும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் ; ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இன்று (10) காலை மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில் கூ;டிய மாநகர சபை அமர்வை சில நிமிடங்களில் ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் ரி.எம்.வி.பி ஐ.தே.கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி சுயேற்சைக்குழு ஈபிடிபி உறுப்பினர்களும் வெளியேறினர்.
பின்னர் பதாதைகளுடன் ஒன்றுதிரண்ட ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர்; மற்;றும் ஆணையாளர்; ஆகியோருக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு சபா மண்டபத்தினுள் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
கிழக்கு மாகாண ஆளுநரின் பின்னணியில் இருந்து கொண்டு அரசுடன் இணைந்து மாநகர சபை நிர்வாகத்தில் தலையீடு செய்யும் மாநகர ஆணையாளர் வேண்டாம்  என்ற கோசம் உட்பட பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
பின்னர்; மாநகர சபை முன்றலில் பதாதைகளுடன் மாநகர மேயரின் தலைமையில் ஒன்று திரண்ட மாநகர சபை உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையிலுள்ள 38 உறுப்பினர்களில்  22 உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் 16 பேர் எதிர்ப்பை வெளியிட்டு கலந்து கொள்ளமையும் குறிப்பிடத்தக்கது.