முதுகல்விமாணி, முதுகலைமாணி கற்கைநெறிகளுக்கான தகுதிகாண்  எழுத்துமூலப்பரீட்சை 2020/2021

கிழக்குப் பல்கலைக்கழக  கலை கலாசார பீடத்தினால் நடத்தப்படும்  முதுகல்விமாணி, முதுகலைமாணி கற்கைநெறிகளுக்கான தகுதிகாண்  எழுத்துமூலப்பரீட்சை எதிர்வரும் 06ஆம் திகதி    பி.ப.1.00 மணிக்கு பரீட்சைகள் மண்டபம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடியில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சைக்கு தகுதிபெற்ற பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை கிழக்குப்பல்கலைக்கழக இணையத்தளத்தில் (www.esn.ac.lk) பார்வையிட முடியும்  என்றும் அவரது அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.