ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பம்.

(அ . அச்சுதன்) கிழக்கு மாகாண ஆளுனரின் ஆலோசனையின் பேரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக நேற்று(04) திருகோணமலை மாவட்டத்தில்  1000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
யான்ஓயா நீர்ப்பாசனத்திட்டத்தின் பகுதிகள் மற்றும் கோமரங்கடவல பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மல்போருவ கிராமத்தின் வனாந்தரப்பகுதியை மையப்படுத்தி மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. மல்போருவ வித்தியாலயத்தில் வைபவரீதியாக ஆளுனர் மற்றும் பாடசாலை மாணவர்களினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜெ. ஜெனார்த்தனால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
காடுகளை மீள உருவாக்கும் இச்செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகின்றது.