அமைச்சருக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு.

(தலவாக்கலை பி.கேதீஸ்) நுவரெலியா மீப்பிலிமான திமுத்திகம கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பாலம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்திற்கு ஆளுங்கட்சி ( வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரட்னாயக்க)  அமைச்சர் ஒருவர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு அடிக்கல்நாட்ட வருகை தந்தார். ஆனால் நுவரெலியா மீப்பிலிமான கிராமத்திலுள்ள விவசாயிகள் எங்களுக்கு இரசாயண உரம் பெற்றுக் கொடுக்கோரி கறுப்பு கொடிகாட்டி காட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்
அடிக்கல் நாட்ட வருகை தந்த அமைச்சர் திரும்பி சென்றார். அதன் பின் சம்பந்தப்பட்ட பாலத்தின் அடிக்கல்லை அரச அதிகாரிகளால் நாட்டப்பட்ட சம்பவம் இன்று (5) இடம்பெற்றுள்ளது.