கந்தளாயில்  பொட்டாசியம் குளோரைட் உரவகை வழங்கி வைப்பு.

(எப்.முபாரக்) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கமநல சேவைகள் நிலையத்தினால் பெரும் போகத்தில் வேளாண்மை செய்கையில் ஈடுபடும் 8000 விவசாயக் குடும்பங்களுக்கு பொட்டாசியம் குளோரைட்டு அடங்கிய உர வகைகள் இன்று(5) விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கந்தளாய் பிரதேசத்தில் பெரும் போகத்திற்கான வேளாண்மை செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு கந்தளாய் குழத்திலிருந்து 22,000 ஆயிரம் ஏக்கர் செய்கைக்கான நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே ஆரம்ப செயற்பாடுகளுக்காக பொட்டாசியம் குளோரைட் அடங்கிய உர வகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இச்செயற்பாடுகள் கந்தளாய் கமநல சேவை நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கந்தளாய் பிரதேசத்தில் விவசாயிகள் ஆர்வத்தோடு சேதன நடவடிக்கைகள் மூலம் விவசாய செய்கைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.