திருகோணமலை பேராறு சஹிது வீதியில் நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை.

(எப்.முபாரக்) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு சஹிது வீதியில் நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளது.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாது மழை காலங்களில் நீரும்,சேரும் சகதி நிறைந்ததாக காணப்படுகின்றது.
இவ்வீதியினை நளாந்தம் முப்பது குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றார்கள்.
தற்போது மழைகாலமாகையால் இரண்டடிக்கு மேல் மழை நீர் வழிந்து காணப்படுகின்றது.
இவ்வீதியால் துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோரும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தொழிலுக்குச் செல்வோரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இவ்வீதியால் பயகின்ற சிறார்கள் பாரிய அசௌகரியங்களை  தினமும் அனுபவித்து  வருகின்றார்கள்.
இவ்சஹிது வீதியை புனரமைத்து தருமாறு பல்வேறு அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே அப்பகுதி மக்களின் நன்மை கருதி பேராறு சஹிது வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.