மன்னாரிலிருந்து கஞ்சாவுடன் புத்தளம் நோக்கிச் சென்றவர் விபத்துக்குள்ளானார்

( வாஸ் கூஞ்ஞ) 03.11.2021

மன்னார் பேசாலை பகுதியிலிருந்து இரவு வேளையில் மோட்டர் சைக்கிலில் கேரளாக் கஞ்சாவை மறைத்துக் கொண்டு சென்ற நபர் ஒருவர் விபத்தில் உள்ளாகிய நிலையில் இராணுவ புலணாய்வு பிரிவினரின் தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதுடன் விபத்துக்கு உள்ளான இவ் சந்தேக நபர் மன்னார் பொது வைத்தியசாலையில் அறுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் (வயது 46) மன்னார் பகுதியில் பெய்து வந்த மழையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திங்கள் கிழமை (01.11.2021)  மன்னார் பேசாலை பகுதியிலிருந்து புத்தளத்துக்கு கேரளாக் கஞ்சாவை கடத்திச் சென்றுள்ளார்.

சம்பவம் அன்று இவர் புத்தளத்துக்கு சென்று கொண்டிருந்த வேளையில் தள்ளாடி முகாமுக்கு அருகாமையில் கழுதை ஒன்றுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இவரின் நிலையையும் இவர் தன்வசம் கஞ்சா வைத்திருப்பதாகவும் மன்னார் தள்ளாடி இராணுவ புலணாய்வு பிரிவினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார உ.பொ.ப.ராமநாயக உ.பொ.ப.வணசிங்க தலைமையிலான அணியினரே மேற்படி  இவ் சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ 665 கிராம் கேரளகஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவ் சந்தேக நபர் விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகியதால் மன்னார் பொது வைத்தியசாலையில் 4 ம் வாட்டில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேகநபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதhக பொலிசார் தெரிவித்தனர்.