நாடளாவிய ரீதியில் ஐயாயிரம் “கோப் பிரஸ்” விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை

100வது சர்வதேச கூட்டுறவு தினத்திற்கு முன்னதாக நாடளாவிய ரீதியில் ஐயாயிரம் “கோப் பிரஸ்” விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை
(ஏ.எல்.றியாஸ்)
100வது சர்வதேச கூட்டுறவு தினத்திற்கு முன்னதாக நாடளாவிய ரீதியில் ஐயாயிரம் “கோப் பிரஸ்” விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு மத்திய கூட்டுறவு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
இவ்வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாணத்திலுள்ள பல நோக்கு கூட்டுறவு சங்கங்களிலும் ஆரம்பிப்பதற்கான நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பொதுமுகாமையாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று (03) மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி பயிற்சிப்பிரிவில் இடம்பெற்றது.
இச் செயலமர்வு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களான கே.வி.தங்கவேல், கலாதேவி உதயராஜா, நளின் மஹிகுமார் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.