பங்களாதேஷில் இடம்பெற்ற கபடி போட்டியின் சிறந்த ஆட்ட நாயகன் விருது இலங்கை வீரர் அஸ்லம் சஜாவுக்கு  !!

நூருல் ஹுதா உமர்

பங்களாதேஷில் இடம்பெற்ற பிராந்திய கபடி சுற்றுப்போட்டியில் “Meghna கபடி கழக” அணிக்கு ஆடுவதற்காக இலங்கை கபடி அணியில் இருந்து நிந்தவூரை சேர்ந்த அஸ்லம் சஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதம் 25ம் திகதி அன்று பிராந்திய கபடி சுற்றுப்போட்டி ஆரம்பமானது. இப்போட்டியின் இறுதி போட்டி நேற்று  (02) இடம்பெற்றது.

இப் போட்டியில் இலங்கை கபடி அணியில் இருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட இரு வீரர்களும் பங்குபற்றிய “Meghna கபடி கழக” அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டதுடன் இறுதி போட்டியின் சிறந்த ஆட்ட நாயகன் விருதை இலங்கையை சேர்ந்த அஸ்லம் சஜாவுக் கிடைக்கப்பெற்றது. கடந்த மார்ச் மாதம் இலங்கை கபடி அணி சார்பாக பங்களாதேசில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் விளையாடிய அஸ்லம் சஜா அச் சுற்றுப்போட்டியின் அதி கூடிய புள்ளிகளை பெற்று சிறந்த Rider ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தர்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கை தேசிய கபடி அணி வீரரும், நிந்தவூர்  மதினா தேசிய பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளரும் ஆவர்.