(ஏறாவூர் நிருபர் நாஸர்)
மட்டக்களப்பு – செங்கலடி கறுத்த பாலம் பகுதியை அண்மித்த வயற் பிரதேசத்தில் இன்று 01.11.2021 காட்டு யானையின் தாக்குதலில் வயோதிய விவசாயி யொருவர் உயிரிழந்துள்ளார்.
நெல் வேளாண்மைக்குள் பிரவேசித்த மாடுகளை விரட்டிச் சென்றபோது பற்றைக்காட்டுக்கள் மறைந்திருந்த யானை இவரைத்தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
வந்தாறுமூலைப் பிரதேசத்தைச்சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய நாகலிங்கம் தாமோதரம் என்பவரே கொல்லப்பட்டவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.
இறந்தவரின் உறவினர்கள் சடலத்தை தூக்கிக்கொண்டு ஆர்ப்பரித்துச்சென்று அண்மையிலுள்ள செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இறந்தவரின் உறவினர்கள் சடலத்தை தூக்கிக்கொண்டு ஆர்ப்பரித்துச்சென்று அண்மையிலுள்ள செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எச்ஏ. ஹக்கீம் விசாரணைகளை ஆரம்பித்தார்.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் இணைப்புச்செயலாளர் சதாசிவம் மயுரன் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டார்.
சமீபகாலமாக செங்கலடி நகரை அண்மித்த பிரதேசத்தில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடுவதை அவதானித்து வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளபோதிலும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்தவாரமும் இப்பிரதேசத்தில் மாடுமேய்த்துக்கொண்டிருந்த விவசாயியொருவர் யானையின் தாக்குதலில் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது.


