மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 75,000 மீன்குஞ்சுகள் விடப்பட்டன

தலவாக்கலை பி.கேதீஸ்

மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 75,000 மீன்குஞ்சுகள் விடப்பட்டன. நுவரெலியா மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உடவளவ மீன் வளர்ப்பு நிலையத்திலிருந்து ரோகு மீன்குஞ்சுகள் நீர்த்தேக்கத்தில் விடப்பட்டன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலுள்ள மீனவச் சங்கங்களை நெறிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு திட்ட அதிகாரி புத்திக குஷான் தெரிவித்துள்ளார்.