கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலத்திற்கு வாகன தரிப்பிடம் திறப்பு

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை அஸ்-ஹுஹரா வித்தியாலத்திற்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம் றியாஸ் மற்றும் தற்போதைய கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஸீரா ரியாஸ் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வாகன தரிப்பிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(01) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எச் ஆர் மஜிதீயா தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஸீரா றியாஸ்,மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வெஸ்டர் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாகன தரிப்பிடத்தினை திறந்து வைத்தனர்.

மேலும் இந் நிகழ்வுக்கு பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் அமீர் ஏ பாரூக் உட்பட அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.