மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பஸ் சேவைகள்

க.கிஷாந்தன்)

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.

இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பஸ் சேவை இடம்பெற்றது.

நுவரெலியா – கொழும்பு, பதுளை – கொழும்பு, கம்பளை – கொழும்பு, பூண்டுலோயா – கொழும்பு, கண்டி – பதுளை, ஹட்டன் – இரத்தினபுரி உட்பட மேலும் பல பஸ் சேவைகள் இடம்பெற்றன.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறையை மீறும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.