நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் மரணம்

ஏ.எச்.எம்.ஹாரீஸ்
கொரோனா காலப்பகுதியில் பயணத் தடை முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் உல்லாச பிரயாணிகள் களியாட்டங்கள் போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் விளைவாக மத்திய முகாம் பிரதேச எச் சந்தி வீதி ஆற்றில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிர் இழந்தவர் மருதமுனை பிறப்பிடமாகக் கொண்ட 21 வயதுடைய எஸ். எல். சராப்கான் என அடையாளம் காணப்பட்டது.
கொழும்பு மாலபே ஒரிஸன் பல்கலைக்கழகத்தின் ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மத்திய முகாம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.