தமிழ்த்தேசிய எல்லைப்பரப்பில யதார்ததமாக்குவதற்குரிய வரலாற்றில் முயற்சி – தமிழ் மக்களாட்சி செயற்குழு

(வடமலை ராஜ்குமாா், அ.அச்சுதன்,  கதிரவன்)

தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலை மல்லிகா கொட்டலில் இன்று காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வணக்கத்துக்குறிய திருகோணமலை மாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் , திருகோணமலை தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் ஆகியோருடன் சட்டத்தரணிகளான எப் .எச்.எஸ். விஜியகுமாா் , வி.எஸ்.எஸ் தனஞ்சயன் , திருமதி யாழினி கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் போது அதிவணக்கத்துக்குறிய திருகோணமலை மாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் , திருகோணமலை தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு அமைகின்றது.

முள்ளிவாய்க்கால் சமூக–அரசியல் வரலாற்று வெளியில், ஈழத் தமிழ் மக்கள்
தங்கள் கூட்டுரிமையின் அடிப்படையில் அமைந்த கோரிக்கைகளை முன்வைத்து மக்களாட்சிஅறத்திற்குட்பட்டு, மக்கள் தங்கள் ஆணையை வலியுறுத்துவதற்கும், நாடாளுமன்றஉறுப்பினர்கள் அக்கூட்டுக் கோரிக்கைகள் தொடர்பில் கருத்தொருமைப்பாட்டைவெளிப்படுத்தக்கூடிய, மக்களாட் சிக்குரிய வெளிப்படைத்தன்மையான வெளி இல்லாத சூழலில்,
அதற்கு மாற்றீடான சூழலை உருவாக்குவதற்கான வரலாற்றுத் தேவை உணரப்பட்டு
விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையிலும்இ நிரந்தரமற்று அமைகின்ற குறிப்பிட்டநோக்கத்தினை அடைவதற்காக உருவாக்கப்பட்டு பின்னர ; கலைகின்ற தீர்வின்தற்காலிகத்தன்மையை, நிலையற்ற தன்மையை ஈடு செய்வதற்காகவும்இ அதற்குப்பொருத்தமான பொறிமுறைச் சட்டகததினை மக்களின் முன்மொழிவுகளினூடு கருத்துக்களைப்பெற்று உருவாக்குவதற்கான பொது முயற்சியினை, மக்கள்-மைய அணுகுமுறையின்
முறையியலைக் கொண்டு தொடங்கி வைத்தோம். இவற்றிற்கான பரீட்சார்த்த செய்முறையின்முதற்கட்டம் நிறைவுற்ற நிலையில்இ இவ்பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டியுள்ளோம்.
பொறிமுறைச் சட்டகத்தை எண்ணிம படிம வெளிக்கூடாக அனைவரும் பங்கேற்கக
கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைஇ முதற்கட்ட கலந்தறிதலில்வலுவான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

எண்ணிம படிம வெளி, யதார்த்தமான ஒரு சூழலில், அனைவரும் பங்கேற்கக்கூடிய முறையில்,தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் கட்டமைப்புத்தொடர்பில் கடந்த 3ம் திகதி ஒக்டோபரில்வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். அதன்  தொடர்ச்சியாக மக்கள்எம்மேல் வைத்த நம்பிக்கையையும் பற்றுறுதியையும், நல்லெண்ணப் பொறுப்பையும் கருத்தில்கொண்டு, மக்கள் இலகுவாக தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவை அணுகத்தக்க முறையில்
பொதுத் தொடர்புக் குழுவை அறிமுகம் செய்து ஈழததமிழ் மக்கள் மத்தியில்
ஆலோசனைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி வைப்பது அவசியம் எனக்கருதுகின்றோம்.

தமிழ்த்தேசிய பரப்பெல்லை, தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினருக்கான
கோட்பாட்டு ஏற்புஇ சர்வதேச நீதிப் பொறிமுறைஇ இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை,புலம்பெயர் சமூகம் தாயக ஈழத ;தமிழ்க் குழுமத்தின ; நீட்சி. சர்வதேச சமூகத்தை நோக்கி தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் இன்னும் பிறநிகழ்பாட்டுப் பிரச்சனைகளை மையப்படுத்தி பல தள ஆலோசனைகளின் பின்னர்வினாக்கொத்தொன்று தயாரிக்கப்பட்டு மிக விரைவில் மக்கள் கருத்தைப் பெறுவதற்காகஇணையத் தளத்தினூடு வினாக்கொத்து வெளியிடப்படும் என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றோம்.
இச்செயற்திட்டம் மக்கள்-மைய வினைத்திறன் கொண்டதாயிருப்பதால் மக்களின்
பங்கேற்பு முக்கியமானதாகின்றது. மக்களாட்சிதத் தத்துவத்திற்கமைய மக்களை அதிகாரத்தைகொண்டவர்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுவதை அறியாமலில்லை. மேற்குறிப்பிட்டதின்நடைமுறைச் சாத்தியப்பாட்டை தமிழ்த்தேசிய எல்லைப்பரப்பில யதார்ததமாக்குவதற்குரியமுயற்சி இதுவாக வரலாற்றில் கணிக்கப்படும். என்பதை வரலாறு பதிவு செய்து கொள்ளும்.
மக்கள்-மையததிலே தான் அதிகாரம் சக்தி குவிந்துள்ளது. அவ் வதிகாரப் பகிர்வின்
விளிம்புநிலை பிரதிநிதித்துவ செயலாண்மை முகவர்களாகவும்இ மக்கள் ஆணையை
செயற்படுத்துபவர்களாகவும்இ மக்கள் பிரதிநிதிகள் விளங்குவதை மக்களாட்சியின் அடிப்படைப்பண்பாக இச்செயற்குழு கருதுகின்றது. மக்கள் ஆணையை பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தவேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தி அதே நேரத்தில் பிரதிநிதித்துவப்படுததலைபிளவுபடுத்தாத, கூட்டாக வெளியுலகிற்கு தெரியப்படுதத வேண்டிய கட்டாயத்தை மக்கள்உணர்ந்துள்ளார்கள். மக்களுக்கான பிரதிநிதிகளாக மக்களாட்சி முறையியலை மீளப் பெற்றுக்கொள்ளுதல் தற்போதைய செல்நெறியின்று மாறுபட்டுஇ பதிலீட்டு அணுகுமுறையாக
அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

மக்களாட்சி குழுவின் செயற ;திட்டத்தை பொதுவெளியில் நின்று முன்னெடுப்பதற்காகமுன்மொழியப்படுகின்ற பொதுத்தொடர்புக் குழுவின் இணைப்பாளராக சட்டதரணிதிரு.விஜயகுமார் அவருடன் சேர்நது நான்கு சட்டத்தரணிகள் இணைந்து செயற்படுவார்கள்.
அவர்கள் எவ்வாறு எங்களால் முன்மொழியப்பட்டார்கள் போன்ற தரவுகள் முன்னைய ஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் செயற்பாட்டின் வினைத்திறன் மக்கள் பங்கேற்பிலேயே தங்கியுள்ளது என்பதை
வலியுறுத்தி அதையே வேண்டுகோளாவும் கேட்டு தொடர்நது இணைந்தது செயற்பட அழைத்துநிற்கின்றோம். எனஅதிவணக்கத்துக்குறிய திருகோணமலை மாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் இ திருகோணமலை தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.