“நெஞ்சில் பூத்த நெருப்பு”.

( எம். என். எம். அப்ராஸ்) அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் வெளியீடுகள் மற்றும் விருது பிரிவின் வெளியீடாக சாய்ந்தமருது என்.எம். அலிகான் எழுதிய “நெஞ்சில் பூத்த நெருப்பு கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீடு  அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் மாளிகைக்காடு பாபா றோயலி மண்டபத்தில் நாளை சனிக்கிழமை (30)  இடம்பெறவுள்ளது.
இவ்வெளியீட்டு விழாவில் அம்பாரை மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இந்நிகழ்வில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்ஏ.எல்.எம். சலீம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் சிராஸ் யூனூஸ், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை தவிசாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் முஸ்தபா, பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், ஆகியோர் முன்னிலை அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளதுடன் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.