கந்தளாய், தம்பலாகாமம் பிரதேசத்தில் பனை ஓலை அலங்கார வடிவமைப்பாளர்களுக்கு இயந்திரங்கள் வழங்கி வைப்பு.

 

(எப்.முபாரக்) சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதற்காக கரும்புஇ பித்தளை, களிமண், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘விடாத’ திட்டத்தின் கீழ் கந்தளாய் தம்பலாகாமம் பிரதேசத்தில் பனை ஓலை அலங்கார வடிவமைப்பாளர்களுக்கு இயந்திரங்கள் இன்று(27) வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் அவர்கள் தங்கள் தயாரிப்புகளை தயாரிப்பதற்கும் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்உபகரணங்களை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரல, மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிக்கோரல ஆகியோர் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்கள்.