அரச அலுவலகங்களுக்கு தலா 35000 ரூபாய் பெறுமதியான கொரோனாத்தொற்று நீக்கி, சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு

(ஹஸ்பர் ஏ ஹலீம்) இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முக்கியமான அரச அலுவலகங்களுக்கு தலா 35000 ரூபாய் பெறுமதியான கொரோனாத்தொற்று நீக்கி உபகரணங்களான Spray Machines, Hand Washing Sink மற்றும் PPE Kits ஆகியன வழங்கப்பட்டது.

சேவிங் ஹியூமானிட்டி பவுன்டேசன் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நேற்று(26) நடைபெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்யபிரியா, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் விஜய்குமார், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராஃமன, ஊழியர் சேமலாப நிதியத்தின் முகாமையாளர் .ஹேவாகம மற்றும் சேவிங் கியூமனிட்டி அமைப்பின் செயற்றிட்ட அதிகாரி ஆஷிக் அலாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.