தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர்

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (25) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் கொவிட் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், சுகியாமா அக்கிரா அவர்களால் பல்வேறு வழிமுறைகளில் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு, ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக, ஜனாதிபதியிடம் ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கொட்டாரோ (Katsuki Kotaro) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.