பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று(22) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

மின் இணைப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான வழியனுமதி, மரங்கள் அல்லது கிளைகளை வெட்டுதல், நஷ்ட்டஈடு வழங்கல் தொடர்பான வழிகாட்டல்கள் இதன்போது ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் ரோசன் வீரசூரியவால் தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களுக்கான பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.மின் இணைப்பு மிக முக்கியமானது.மின் இணைப்பு பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான வழியனுமதி பெறும் முறை, வழியனுமதி மறுக்கப்படும்போது பிரதேச செயலாளர்களின் வகிபாகம் குறித்து சட்ட ரீதியான அடிப்படைகளை தெளிவுபடுத்த முன்வந்தமை குறித்து தமது நன்றிகளை இதன்போது அரசாங்க அதிபர் மன் தர்சன பாண்டிகோராள ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) பி.ஆர்.ஜயரத்ன, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.