2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்  பிரதேச செயலக ரீதியாக பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தின்  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவிற்கான முன்மொழிவுகளைப்பெறும் நிகழ்வு நேற்று (18) திருகோணமலை பட்டினமும் சூழலும்  பிரதேச சபை மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல  தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் அபிவிருத்தி முன்மொழிவுகள் இதன்போது பெறப்பட்டன.
கிராமிய அபிவிருத்தியை துரிதப்படுத்தும் அரசாங்கத்தினுடைய தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய முன்மொழிவுகள் கிராம சேவகர் பிரிவு தோறும் பெறப்பட்டு வருகின்றன.
இம் முன்மொழிவுகளை கிராமத்திலிருந்து பெறுவதன் மூலமாக கிராமத்தின் தேவைகளுக்கேற்ப அபிவிருத்தி தேவைகளை மேற்கொள்ளக்கூடியதாக  அமையும் என்று இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு எதிர்வரும் வருடத்தில் 1574 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற இருக்கின்றது. இதன் மூலம் கிராம உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். நிதியமைச்சர் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்  திட்டங்களை மக்களிடம் இருந்து பெறுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன் ஒரு அங்கமாக இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் காணப்படுவதாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலபதி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் சந்துன் ரத்நாயக்க, பிரதேச உள்ளூர் அதிகார சபை பிரதிநிதிகள் ,அரசியல் பிரமுகர்கள் ,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
https://supeedsamtv.com/?video=trincomalai-4