திருகோணமலையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்

திருகோணமலையில் கணவர்களை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

நேற்று  முன்தினம் (17) இந்நிகழ்வு இடம்பெற்றது

பசுமையான திருகோணமலை வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை பாலையூற்று பூம்புகார் வடக்கு பிரதேச கணவர்களை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பசுமையான திருகோணமலை வேலைத்திட்டத்தின் அமைப்பாளர்களான கிருபாகரன் அசோகன் மற்றும் என்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இவ்வாறு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

இவ்வாறு வழங்கப்பட்ட முருங்கை,தேசி மற்றும் தென்னை மரங்கள் பாலையூற்று பூம்புகார் கிழக்குப் பகுதியில் தெரிவுசெய்யபட்ட பெண்கள் தலைமைதாங்கும் 30 குடும்பங்களுக்கு இவ்வாறு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் பசுமையான திருகோணமலை வேலைத்திட்டத்தின் அமைப்பாளர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்

வழங்கப்பட்ட மரக்கன்றுகள் எவ்வாறு பராமரிக்கப் படுகின்றது என்பதினை பசுமையான திருகோணமலை வேலைத்திட்டத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவதானிப்பதுடன்  திருகோணமலை மாவட்டத்தில் பொது இடங்கள் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறான மரக்கன்றுகள் வழங்கி வைத்து நாட்டின் பசுமையான மாவட்டமாக திருகோணமலை மாவட்டத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம் என பசுமையான திருகோணமலை வேலைத்திட்டத்தின் அமைப்பாளர்க்ளில் ஒருவரான  கிருபாகரன் அசோகன் இதன்போது கருத்து தெரிவித்தார்