சாலை முகாமையாளரை மாற்றக் கோரி இ.போ.ச மட்டக்களப்பு சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையின் ஊழியர்கள் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை போக்குவரத்து சபை மட்டக்கப்பு சாலையின் தற்காலிக முகாமையாளரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு அவரை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டிருந்தனர்.

மட்டக்களப்பு சாலையின் சுவர்களில் எதிர்ப்புப் பதாதைகள் தொங்கவிடப்பட்டு ஊழியர்கள் சாலையின் வெளியே பணிக்குச் செல்லாமல் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மதுபோதையில் ஈடுபாடு இல்லாத மட்டக்களப்பு சாலை முகாமையாளர் தேவை, மட்டக்களப்பு சாலை உள்ளாச விடுதியாகச் செயற்பட எந்த ஊழியருக்கும் விருப்பம் இல்லை, கடந்த காலத்தில் மட்டக்களப்பு சாலையைச் சீரழித்த தற்காலிக சாலை முகாமையாளர் எங்களுக்குத் தேவையில்லை போன்ற வாசகங்கள் தொங்கவிடப்பட்டும், கையில் ஏந்தியவாறும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.