அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் விதைப்பு நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் விதைப்பு நடவடிக்கையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸின் பங்குபற்றுதலுடன் நேற்று (15.10.2021) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் ஹேன்ட் ரிட்ச் (ர்யனெசiஉh) விவசாய பராமரிப்புத் தீர்வுகள் மற்றும் கைத்தொழில் நிலையத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை மீலாத் நகர் விவசாய பிரதேசத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வில்,

நஞ்சற்ற உணவு பாவனை, இலாபமீட்டும் நவீன விவசாய முறைகள், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை பயன்பாடு மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு முதன் முறையாக ட்ரம் சீடர் (னுசரஅ ளுநநனநச) முறையினை பாவித்து வரிசையில்  நெல் விதைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், விவசாய போதனாசிரியர் ஏ.எச்.எம். முபாறக், கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் எம். சம்சுதீன், ஹேன்ட் ரிட்ச்  நிறுவனத்தின் பிரதிநிதிகள், விவசாயிகள், பிரதேச விதை நெல் விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.