மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்  நவராத்திரி பூஜை நிகழ்வுகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்  நவராத்திரி பூஜை நிகழ்வுகள் இன்று (15) மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சுகாதார விதிமுறைககளப் பின்பற்றி மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

மாவட்ட கலாசார பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நவராத்திரி பூசை நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது பங்கேற்புடன் இடம்பெற்றது.
அத்தோடு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன்,  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி. இந்திராவதி மோகன், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை  கொண்டு  விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. பஜனை வழிபாடுகளுடன் ஆரம்பமான பூசையானது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில்  நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் சகலகலா வள்ளி பாமாலை பாடப்பட்டு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த பூஜைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை இன நல்லுறவை வெளிக்கொணர்ந்ததோடு இனநல்லுறவை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

பூசையின் நிறைவில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் சிறார்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது