தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலமாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது முற்றுப்பெறாத நிலையில்

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

( வாஸ் கூஞ்ஞ)

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் 2019 ஆம் ஆண்டு  வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலமாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது முற்றுப்பெறாமல் நிலுவையில் இருந்து வருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

மனித வாழ்வுக்கு அத்தியாவசிய தேவைகளாக காணப்படுவது ஊண், உடை. உறக்கம். ஆனால் முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் 2019 ஆம் ஆண்டு  வீட்டுத்திட்டத்தpன் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலமாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது முற்றுப்பெறாமல் தொடர்ந்து நிலுவையில் இருந்து வரகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கhன இந்த வீட்டுத்திட்டம் இன்னும் ஒரு முடிவிற்கு வராத நிலையால் இவ் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த மக்களின் நிலை என்ன? இன்று இந்த மக்கள் மனதில் பல கேள்விகளுடன் வாழ்ந்து வருகின்றனர்

இந்த பிரச்சனையானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமல்ல எனது வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஏனைய மாவட்டங்களான மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகின்றமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

உடனடியாக வீடுகள் வழங்கப்படவேண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள்  விபரங்களையும் இணைத்து பாராளுமன்னற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடித மூலம் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.