கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேரமடுவ கிராம விவசாயிகளுக்கு விவசாய உபகாரங்கள் கையளிப்பு

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேரமடுவ கிராமத்தில் வசிக்கும் பெண்கள் விவசாய குழுவினருக்கு அகம் மனிதாபிமான வள நிலையத்தினால்  சனிக்கிழமை  (9) நிர்மாணிக்கப்பட்ட விவசாய கிணறானது மாவட்ட செயலாளரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் அங்கு இயங்கி வரும் பெண்களின் விவசாய சந்தையானது அகம் மனிதாபிமான வளர் நிலையத்தினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது மேலும் இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் மஞ்சள்அஞ்சல் கன்றுகள் பயிர் விதைகள் போன்றவை வழங்கப்பட்டன.
அத்துடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இரண்டு பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும்  பெட்டிகள் போன்றவையும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,மற்றும் கந்தளாய் பிரதேச செயலாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் போன்றோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த கிராமத்தில் காணப்படும் குறைபாடுகள் அம்மக்களால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேரடியாக எடுத்துக் கூறப்பட்டதுடன் அதற்கான மனுக்களும் மக்களால் கையளிக்கப்பட்டது.
பேரமடுவ  கிராமத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதாக அரசாங்க அதிபர் மக்களிடம் உறுதியளித்து கொண்டார்.