மட்டு.தளவாயில் வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் விநியோகம்

மட்டக்களப்பு, தளவாய் – சேனைக் கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில்  நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு தலா 2140/- ரூபா பெறுமதியான பொருட்கள் பகிர்ந்து வழங்கப்பட்டன.

குறித்த பொருட்களை ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அகில இலங்கை சமாதான நீதவான் செ.குமரன், தளவாய் மீனவர் சங்க தலைவர் சி.சிவராசா மற்றும் சமூக ஆர்வலர் ச.தினேஷ்காந் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

இதேவேளை, ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தால் மட்டக்களப்பின் பல்வேறு கிராமங்களிலும் வறிய குடும்பங்களுக்கு இவ்வாறான உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.