சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிடில் நோயாளிகளின் அசௌரியங்களுக்கு அரசே பொறுப்புகூற வேண்டிவரும். தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம்

வாஸ் கூஞ்ஞ) 27.09.2021

சுகாதார சேவைகள் பணியாளர்களின் நியாமான கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது தடவையாக நாங்கள் இவ் போராட்டத்தை நடாத்துகின்றோம். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தாவிடில் எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு எற்படும் அசௌரியங்களுக்கு அரசே பொறுப்பு கூற நேரிடும் என மன்னார் மாவட்ட ஜனகஜ சுகாதார சேவைகள் சங்கத்தினதும் வட மாகாணத்தின் தலைவருமான எஸ்.எச்.எம்.இல்ஹாம் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை  (08.10.2021) 41 சுகாதார தொழிற் சங்கங்கள் இணைந்து ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் நடாத்திய போரட்டமானது மன்னார் பொது வைத்தியசாலையிலும் காலை 7 மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட ஜனகஜ சுகாதார சேவைகள் சங்க தலைவரான எஸ்.எச்.எம்.இல்ஹாம் ஊடகங்களுக்கு  தெரிவிக்கையில்

இன்று அதாவது வெள்ளிக்கிழமை (08.10.2021) நாங்கள் நான்காவது தடவையாகவும் நாங்கள் 41  தொழிற் சங்கங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து இவ் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த போராட்டமானது எங்களது நியாமான கோரிக்கைகளாக கொண்டதாகவே இருக்கின்றது.

எங்கள் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் சலுகைகளை முன்வைத்தே இவ் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்றைய போராட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருப்பது கொவிட் காலத்தொடக்கம் எங்களுக்கு 7500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்தன.

இவை தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. கொவிட் காலமாகிய இந் நாட்களில் நாங்கள் தொடர்ந்து இதற்கான எங்கள் பணிகளை மேற்கொண்ட வருகின்றோம்.

ஆகவே இவ் கொவிட் காலம் முடியும் வரை இவ் கொடுப்பனவு எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

சுகாதார நடவடிக்கையானது அனைவரினதும் கையில்தான் இருக்கின்றது. ஆனால் ஒரு சிலரை மட்டும் உள்வாங்கி அவர்களுக்கு மட்டுமே இவ் சலுகைகள் வழங்குகின்றார்கள் என்றால் எங்கள் 41 தொழிற் சங்கங்களைச் சார்ந்த ஊழியர்களுக்கும் இவ் அரசாங்கம் பழி வாங்குகின்றது என்றே கூற முடியும்.

ஆகவே எங்கள் விடயத்தில் ஜனாதிபதி. பிரதமர். சுகாதார அமைச்சர் சுகாதார திணைக்கள அதிகாரிகள் யாவரும் எங்கள் கோரிக்கைகளை செவ்வணே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி நிற்கின்றோம்.

அவ்வாறு இதையும் இவர்கள் பொருட்படுத்தாது எமக்கு அநீதி விளைவிப்பார்கள் என்றால் நிச்சயம் எமது போராட்டம் நாடு பூராகவும் கவனயீர்ப்பு போராட்டமாக இருக்காது.

மாறாக இது விடுமுறையிலான பணி பகிஷ்கரிப்பு போராட்டமாகவே அமைய இருக்கின்றது. இதனால் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் அசௌரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டி எற்படும் என நாங்கள் தெரிவித்து நிற்கின்றோம். என இவ்வாறு தெரிவித்தார்.

செய்திக்கான வீடியோவைப்பார்வையிட

HomePage