களுவாஞ்சிக்குடி பிரதேசசபையின் வருமானவரி மேற்பார்வையாளர் கைது.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேசசபையில் பணிபுரியும் வருமானவரி மேற்பார்வையாளர் ஒருவர் இன்று களுதாவளையில் உள்ள பிரதேச சபைஅலுவலகத்தில்  வைத்துஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவினரே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.