மர்ம மரணம்! நடந்தது என்ன?(Video)

(எருவில் துசி) நவகிரிநகர் கிராம சேவையளர் பிரிவில் 55 வயது மதிக்கத்தக்க நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு.

நவகிரிநகர் கிராம சேவையாளர் பிரிவில் 38ம் கிராமத்தில் அமரசிங்கம் சுந்தரலிங்கம் என்பவர் நேற்றய தினம் வீட்டைவிட்டு வெளியேறி சென்றுள்ளார். குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடியும் வீடு வந்தடையவில்லை இந்நிலையில் இன்று(02) மாலை 38ம் கிராமம் வைரவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள சிறு வாய்காலில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபரின் நெற்றியல் சிறு காயம்
காணப்படுவதும் குறிப்படத்தக்கது. மேலும் அவரின் துவிச்சக்கரவண்டி வாய்காலினுள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதுவரை குறித்த நபர் எவ்வாறு மரணமடைந்தார் என்பது தொடர்பாக எதுவும் அறிய முடியாதுள்ளதாக உறவினர்கள் கருத்து தெரிவித்தனர்.