மட்டக்களப்பில் குடும்பப் பெண் மரணம் சந்தேகத்தின் பெயரில் கணவன் பொலிசாரால் கைது.

(ரக்ஸனா)

மட்டக்களப்பு மவாட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிளுர் கிராமத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை(01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 31 வயதுடைய இராசரெத்தினம் இராசேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இக்குறித்த மரணம் தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் கணவர் க.கனகராசா என்பவர் சந்தேகத்தின் பொலிசாரால் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…

சம்பவ தினமான வெள்ளிக்கிழமை(01) மாலை குறித்த குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவர் அயலவர்களை அழைத்து மனைவி விழுந்துகிடக்கின்றாள் என தெரிவித்துள்ளார் அயலவர்கள் ஓடிவந்து வீழ்ந்து கிடந்த பெண்ணை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளன. இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராசேந்தினிக்கும் கனகராசாவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைந்ததாகவும்இ திருமணம் முடித்துவிட்டு கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் 5 வருடங்கள் தொழில் செய்துவிட்டு மீண்டும் வீடு வந்து பின்னர் மீண்டும் மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று இரண்டரை வருடங்கள் தொழில் செய்துவிட்டு கடந்த 14.09.2021 அன்றயத்தினம்தான் வீட்டுக்கு வந்தாகவும்இ இவர்களுக்கு குழந்தைகள் இல்லை எனவும்இ அவர் வீடு வந்த தினத்திலிருந்து மதுபானம் அருந்திவிட்டு மனைவியுடன் தொடர்ந்து சண்டைபிடித்து வந்ததாகவும்இ இராசேந்தினியை அவரது கணவர்தான் அடித்துக் கொன்றுள்ளார் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் தாய் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் இழந்துள்ளார் எனினும் தந்தை அவருடனேயே வசித்து வருகின்றார். தனது மகளுடன் மருமகன் அடிக்கடி சண்டை பிடித்து வந்ததாகவும். அதனை தான் விலக்கச் செல்லும்போதெல்லாம் தன்னை மருமகன் துரத்திவிடுவதாகவும்இ மருமகன்தான் தனது மகளை கொண்றுவிட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை இராசரெத்தினம் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் தனது தங்கையான இராசேந்தினியை தான் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்ததும் அடித்துக் கொலை செய்யப்போவதாக தனக்கு குரல் பதிவொன்றை தங்கையின் கணவர் தனக்கு கைத் தொலைபேசிக்கு ஏற்கனவே அனுப்பிவைத்திருந்தாகவும்இ தங்கையை அவரது கணவர்தான் கொலை செய்துள்ளார் என பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரன் தெரிவிக்கின்றார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி பொலிசாரும்இ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரும்இ நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை (02) களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன்இ சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு சடலத்தை பிரேத சரிசோதனைக்குட்படுத்தும்பிடி உத்தரவிட்டுள்ளார்.