பேருந்து சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு

ஊழியர் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுவதில்  சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து போக்குவரத்திற்கு  அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் நேற்றய தினம் போதிய அளவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக இஅமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.