திருக்கோவில் பிரதேசத்தில் பாசிபயறு மற்றும் கௌபி அறுவடை விழா.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரிவில் கஞ்சிகுடியாறு றுபஸ் வயல பிரதேசத்தில் பாசிபயறு மற்றும் கௌபி அறுவடை விழா இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.லோகநாதன் மற்றும் விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சயரூபன் இணைத் தலைமையில் கஞ்சிகுடியாறு றுபஸ் வயலில் இன்று இடம்பெற்று இருந்தன.

விவசாய திணைக்களத்தினால் மூன்றாம் போக விவசாய அவிருத்தி கொள்கை திட்டமிடலுக்கு அமைவாக நெல் அறுவடை நிறைவு பெற்றதை தொடர்ந்து அடுத்த போக நெற் செய்கைக்கு இடைப்பட்ட காலத்தில் வயல் காணியில் பாசிபயறு மற்றும் கௌபி போன்ற தாணியப் பயிர்களை பயிரிட்டு  விவசாயிகள் தொடர் உற்பத்திகளின் ஊடாக வருமானத்தை ஈட்டும் வகையில் இவ்வாறு முன்றாம் போக விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாக இவ் பாசிபயறு மற்றும் கௌபி என்பன பயிரிடப்பட்டு இன்று அதன் அறுவடை விழா இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.தேவராணி, மாவட்ட பாடவிதான உத்தியோகத்தர் நிசார் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.