செழுமைமிக்க 100 நகரங்கள் திட்டம் மட்டக்களப்பில் இன்று ஆரம்பித்து வைப்பு

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு பிரகடனத்தின் செழுமை மிக்க 100 நகரங்கள் எனும் தொனிப்பொருளிலான திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஊறணி பிரதேச மையப்பகுதியினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வானது நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியில் குறித்த திட்டத்தின் கீழ் ஊறனி சந்தியில் இருந்து வாவியோரமாக நடைபாதை அமைத்து அழகுபடுத்தும் செயற்பாடு ரூபா 17.38 மில்லியன் பெறுமதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

நகர திட்டமிடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர திட்டமிடல் அதிகாரசபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஜகத் லியனகே, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.தயாபரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது அபிவிருத்திக் குழு இணைத்தலைவரினால் குறித்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.