திருகோணமலையில் முதல் தடவையாக முச்சக்கர வண்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முச்சக்கரவண்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

இன்று (29) திருகோணமலை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தியர்  சையொழிபவன் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

இச் சேவையானது ஈகை தனியார் தொண்று  நிறுவனத்தின் ஊடாக உப்புவெளி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இச்  சேவையினை  முன்னெடுப்பதாக வைத்தியர் சையொழிபவன் தெரிவித்தார்

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட முச்சக்கர வண்டி மூலம் சேவையானது பிரதேசத்தில் நிலவும் அவசர அம்புலன்ஸ் சேவையினை நிவர்த்தி செய்வதட்காகவும் covid-19 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கும் கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை கொண்டு செல்வதற்குமான சேவையை முன்னெடுக்கும் என இதன்போது தெரிவித்தார்

மேலும் எமது வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையினை தாமாக முன்வந்து இலவசமாக செய்வதற்கு ஏற்பாடுகளை செய்த ஈகை தனியார் தொண்று  நிறுவனத்திற்கு இதன்போது நன்றியை தெரிவித்ததோடு

இவ் ஆரம்ப கட்ட நிகழ்வில் உப்புவெளி வைத்திய அதிகாரி டாக்டர் சையொழிபவன் மற்றும் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் உற்பட  ஈகை தனியார் தொன்று நிறுவனத்தின் அமைப்பாளர் கருமேகம் நிசாந்தன்,திட்டமிடல் அதிகாரி யோகநாதன் கரிதரன் மற்றும் ஈகை தனியார் தொன்று நிறுவனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.