நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் ரமேஷ் பத்திரன

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று  அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.