பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் : கப்ரால் தெரிவிப்பு

கோவிட் தொற்று நோய் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அவசியமான திட்டங்களை எதிர்வரும் முதலாம் திகதி அன்று அறிவிக்கப்படும் என்று  மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின்  அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டங்களுள், தற்போது நடைமுறையிலுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிட்டார்.