இயற்கைப் பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

பெரும் போக பயிர்செய்கைக்கு தேவையான இயற்கைப் பசளைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சரால்  நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு  அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்கீழ், சேதன உரம், இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நெற் பயிர்செய்கைக்கு தேவையான உரம் அரச உரக்கம்பனியாலும், ஏனைய பயிர்களுக்கு தேவையான உரம் அனுமதிப்பத்திரம் உள்ள உரக்கம்பனிகளாலும் இறக்குமதி செய்யமுடியும்.