விமானத்தில் தங்கம் கடத்திய சந்தேகத்தில் இருவர் கைது

விமானத்தில் 16 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த இரு சந்தேக நபர்களை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு தங்கக் கடத்தல்  மோசடியில் ஈடுபட்ட நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடத்தப்படவிருந்த தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 220 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

துபாய் நகரத்திலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் மின் இயந்திர பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்து, அதனுள் மறைத்து 16 கிலோ தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

உதிரிப் பாகங்களின் உட்புற பாகுதிகள் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளன.

ஒரு போலியான வணிகப் பெயரில் கொரியர் சேவை நிறுவனம் ஒன்றின் மூலம் விமான சரக்கு பகுதியில் குறித்த பொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.