மட்டக்களப்பில் ஏழுபேருக்கு சமாதான நீதிவான் பதவிகளை பெற்றுக்கொடுத்த பிள்ளையான்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுதலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று தீவூ முழுவதற்குமான சமாதான நீதவான்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்தார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பணியாற்றுவதற்காக தீவூ முழுவதற்குமான ஏழு பேர்களுக்கான நியமனங்கள் நண்பகல் தனது மாவட்ட அபிவிருத்தி குழு காரியாலயமான மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

ஏழு சமாதான நீதிவான்களாக ஆறுமுகம் தேவராசா நவரெத்தினம் திருநாவுகரசு சங்கிதா கண்ணதாசன்  தில்லைநாதன் நித்திஸ்வரன் சிவமார்க்கன்டு சுஜாகரன் ராமமூர்த்தி நிசாந்தன் பாக்கியராஜா தினேஸ்குமார் ஆகியோர் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றில் மாவட்ட நீதவான் ரீ.கருணாகரன் முன்நிலையில் தீவூ முழுவதற்க்குமான சமாதான நீதவான்களாக சத்தியப்பிரமானம் செய்துகொன்டனர் இன் நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்ச்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்து கொன்டார்.