சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப் புறக்கணிப்பால் பொதுமக்கள் அசௌகரியம்

44 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து  இன்று முன்னெடுத்த 5 மணிநேர பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று  காலை 7 மணி முதல் 12 மணிவரை ஐந்து மணித்தியால பணிப்புறக்கணிப்பை குறித்த தொழிற்சங்கள் மேற்கொண்டிருந்தன.

இதன்காரணமாக, நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் ஒளடத விநியோகம், வைத்தியசாலை பராமரிப்பு உள்ளிட்ட பல நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா பாதிப்பு கொடுப்பனவு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்ததாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் மகிந்த குருகே தெரிவித்துள்ளார்.