வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஐந்து பேர் 9ஏ, இருவர் காத்திருப்பு

dav

கல்குடா வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று கோட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 05 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 02 மாணவர்கள் 8ஏ, (தொகுதிப்பாடங்களுக்கான செயற்முறை நடைபெறவில்லை –  Non finalized   ) பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை முதல்வர் ச.கு.கமலசேகரன் தெரிவித்தார்.

கல்லூரியில் 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஜெகதீஸ்வரன் அக்ஷித்தா, புஸ்பராஜா சதுர்ஷன், ராஜேந்திரன்    ரிலக்ஷன், றொபேர்ட்கரன் பிரஜீத் பிரனீஷ், அன்பழகன் அல்பனா ஆகியோர் 9ஏ சித்திகளையும், ஜெகதீஸ்வரன் அஸ்மிதா, யோகராஜா ஷகலியா. ஆகியோர் 8ஏ சித்திகளையும், பரமேஸ்வரன் யனுஸ்க்கா, யோகராஜா கீர்த்தனா 7ஏ, வி, (தொகுதிப்பாடங்களுக்கான செயற்முறை நடைபெறவில்லை  Non finalized  ) சித்திகளையும், 8ஏ, சி சித்திகளை 02 மாணவர்களும், 7ஏ, வி,சி சித்திகளை 01 மாணவியும், 7ஏ, 2வி சித்திகளை 01 மாணவியும், 7ஏ, 2சி சித்திகளை 01 மாணவியும் பெற்று பாடசாலை பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை முதல்வர்; ச.கு.கமலசேகரன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண பரீட்சை எழுதிய 143 மாணவர்களில் 106 மாணவர்கள் இம்முறை உயர் தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளதுடன், கடந்த 2019ஆம் வருடத்தோடு ஒப்பிடுகையில் 88 மாணவர்கள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்று 71 வீதமாக காணப்பட்டது. 2020 இல் 106 மாணவர்கள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்று 74 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் பாடசாலை முதல்வர்; ச.கு.கமலசேகரன் தெரிவித்தார்

????????????????????????????????????